நண்பர்களான சிங்கமும் எலியும்
ஓர் அடர்ந்த காட்டில் ஒரு சிங்கம் வசித்து வந்தது. ஒருநாள் அச்சிங்கம் அசதியால் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது எலி ஒன்று அவ்வழியே நடந்துச் சென்றது. அது சிங்கம் உறங்கிக் கொண்டிருப்பது தெரியாமல் அதன் மேலே ஏறியது. அதை உணர்ந்த சிங்கம் திடீரென்று கண் விழித்தது. கோபத்தில் சிங்கம் அந்த எலியை சட்டெனப் பிடித்தது."ஏய் எலியே உனக்கு என்ன அவ்வளவு தைரியமா?என் தூக்கத்தைக் களைத்து விட்டாயே..."என்றது சிங்கம். எலி பயத்தில் தான் தெரியாமல் செய்து விட்டதாக கூறியது. எலி சிங்கத்திடம் தன்னை விடுவிக்கக் கூறியது. தன்னை விடுவித்தால் சிங்கத்திற்கு ஏதாவது ஒருநாள் தான் உதவி செய்வதாகக் கூறியது எலி. அதைக் கேட்ட சிங்கம் வாய்விட்டுச் சிரித்தது. "இவ்வளவு சிறிய உடல் கொண்ட நீயா எனக்கு உதவி செய்யப் போகிறாய்" என்று கேட்டது சிங்கம். சிரித்தவாரே எலியை விடுவித்தது சிங்கம். மூன்று மாதங்கள் கடந்தன. ஒருநாள் எலி காட்டிற்குள் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அவ்வழியே "உதவுங்கள்..உதவுங்கள்" என்ற குரல் ஒன்று கேட்டது. எலி பயத்தில் அக்குரல் கேட்கும் திசையை நோக்கிச் சென்றது. அங்குச் சிங்கம் வேடன் ஒருவன் போட்ட வலையில் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டது. உடனே, எலி ஓடி சிங்கத்தைக் காப்பாற்ற முயற்சி செய்தது. எலி தன் பல்லால் அந்த வலையைக் கடித்தது. இறுதியில் சிங்கம் வலையிலிருந்து வெளியேறியது. எலி மிகுந்த மகிழ்ச்சியுடன் சிங்கத்தைப் பார்த்தது. சிங்கம் எலியிடம் நன்றி கூறியது. அன்று முதல் சிங்கமும் எலியும் நண்பர்களாயின.
Pelajar bolehlah menonton video tersebut agar mereka dapat memahami cerita dengan lebih jelas.
ReplyDeleteNice story...
DeleteNice story...
DeleteGood try guys!! Keep it up
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete